வாழைச்சேனை மியான் குளம் பகுதியில் அதிகாலை பயணிகள் இறக்கப்பட்டு பேருந்து எரியூட்டப்பட்டுள்ளது

tn_bus_accidentமட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை மியான் குளம் பகுதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று எரியூட்டப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். இலங்கை நேரம் அதிகாலை 2.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்தை வழிமறித்தவர்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி சில யார் தூரம் முன்னோக்கிச் செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். அதன் பின் பேருந்து எரியூட்டப்பட்டுள்ளது.

படையினரின் சீருடைகளை போன்ற சீருடை அணிந்தவர்களே இதனை மேற்கொண்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது பயணிகள் எவரும் பாதிக்கப்படவில்லை. இந்த பேருந்து எரிப்புச் சம்பவம் இடம்பெற்ற மியான் குளம் காட்டுப்பகுதியில் 2 இராணுவமுகாம்கள் அமைந்துள்ளன. குறிப்பாக சம்பவ இடத்திற்கு 600 700 யார் தூரத்தில் இவை அமைந்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.