உண்ணாநிலை போராட்டத்தின் போது விமல் உணவை உட்கொண்டுள்ளார்: இராணுவ வைத்தியர்

ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக கடந்த வாரம் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்ட சிறீலங்கா அரச அமைச்சர் விமல் வீரவன்சா போராட்டத்தின் போது மென்மையான மற்றும் சத்துள்ள உணவுகளை உள்ளெடுத்திருந்ததாக இராணுவ வைத்தியசாலை வட்டாரங்கள் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளன.

விமலின் உண்ணாவிரத மேடையில் எடுக்கப்பட்ட படம். உண்ணாவிரத மேடையில் இதன் அவசியம் என்ன?

பிஸ்கட், விற்றமின் உட்பட சிறிதளவு நீரையும் அவர் அருந்தியுள்ளது மருத்துவ சோதனைகளில் தெரியவந்துள்ளதாக இராணுவ வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமலின் சிறுநீரகம் ஏற்கனவே பாதிப்படைந்துள்ளதனால் அவர் ஒரு லீற்றர் நீரையாவது அருந்தாது விட்டிருந்தால் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும், ஆனால் விமல் திருட்டுத்தனமாக நீரை அருந்தியதால் தப்பிக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.