சரத் பொன்சேகாவிற்கு தொலைபேசி வசதிகளை வழங்க முடியாது – நீதிமன்றம்

ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற:கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாதென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் தமது புதல்வியருக்கு அழைப்புக்களை மேற்கொள்ள தொலைபேசி வசதிகளை வழங்குமாறு கோரி சரத் பொன்சேகா நீதிம்ன்றில் கோரியிருந்தார்.
 
எவ்வாறெனினும், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு இவ்வாறான வசதிகளை வழங்க முடியாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
மனிதாபிமான அடிப்படையில் தமது புதல்வியருக்கு பேச அனுமதிக்குமாறு சட்டத்தரணி ஊடாக சரத் பொன்சேகா கோரியுள்ளார்.
 
சிறைச்சாலைக்கு வெளியே நடந்து சென்று உடற்பயிற்சி மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்குமாறு நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
 
எதிர்வரும் ஜூலை மாதம் 26ம் திகதி வரையில் சரத் பொன்சேகாவை தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.