ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடரும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் இன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தப் போவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சற்று முன்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
 
அரசியல் சாசனத் திருத்தம் மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.