யுத்தக் குற்றங்களை மறைக்க சிறிலங்கா முயற்சிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களை மறைப்பதில் சிறிலங்கா முனைப்புக் காட்டுவதாகவும் இதன் ஒரு அங்கமாகவே ஐநாவின் நிபுணர் குழுவிற்கு அது தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தலைமையில் ஐநாவின் நிபுணர் குழுவுக்கு எதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டங்கள் இந்த விசாரணைகளுக்கு எதிரான அரசாங்கத்தின் பகிரங்க விரோதத்தை வெளிப்படுத்துகிறது எனவும் அது தெரிவித்துள்ளது.

இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த கொடூரங்கள் குறித்து விசாரணை நடத்துவதில் இந்த அரசாங்கம் தீவிரமாக இருக்கும் எனக் கருதுபவர்கள் எவரேனும் ஐ.நா.  செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவிற்கு எதிரான தொந்தரவுகளை அவதானிக்க வேண்டும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பேச்சாளர் அலன் பியர்ஸன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் பான் கீ மூனுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விட, அவருடன் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் இது எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.