பொன்சேகாவுக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் இருபது வருட சிறைத்தண்டனை வழங்கப்படும்

அரசைக் கவிழ்க்கின்றமைக்கு சதி செய்தார் என்று குற்றஞ்சாட்டி முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

சரத் பொன்சேகா கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து நின்று போட்டியிட்ட பிற்பாடு அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மூன்றாவது வழக்கு இதுவாகும்.

படைவிட்டோடிகள் 10 பேரை சேர்த்துக் கொண்டு அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் இத்தேர்தல் காலத்தில் பொன்சேகா ஈடுபட்டிருக்கிறார் என தெரிவித்து பொலிஸார் இந்த வழக்கைத் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி முன்னிலையில் உடனடியாகவே இடம்பெற்றது.

இக்குற்றச்சாட்டு சம்பந்தமாக புலனாய்வு விசாரணை நடத்தி எதிர்வரும் 26 ஆம் திகதி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

பொன்சேகா இந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டால் அவருக்கு 20 வருடங்கள் வரை கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்படலாம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.