தகாத உறவில் அண்ணன் தங்கை: பிரிட்டனில் பரபரப்பு – எங்கே செல்லுகின்றது உலகம்!!

பிரிட்டனில், தகாத முறையில் பாலியல் உறவில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்ட அண்ணனும் தங்கையும் இரு வருடங்கள் கடப்பதற்குள் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளென்ரோத் பிராந்தியத்தைச் சேர்ந்த 30 வயதான நிக் கெமரூனும் அவரின் ஒன்றுவிட்ட சகோதரியான டேனியல் ஹீலியும் உடலுறவில் ஈடுபட்டமை அவர்களின் தாயார் மூலம் பகிரங்கமாகியது.

25 வயதான டானியெல்லா ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தயானாவர். ஆனால் தனது சகோதரனுடனான தகாத உறவு காரணமாக கணவரைப் பிரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பொலிஸார் விசாரித்தபோது அவர்கள் தாம் தகாத முறையிலான இந்த உறவில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.  அவர்கள் மீண்டும் உடலுறவு கொள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்து தான் மீண்டும் நிக் கெமரூனுடன் உறவுகொள்ளப் போவதில்லை என டானியெல்லா கூறினார்.

ஆனால் இப்போது இருவரும் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்துள்ளமை  மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உடலுறவில் ஈடுபடாமலும் தாம் ஒரே வீட்டில் வசிக்கமுடியும் என இவர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் மீண்டும் தவறு செய்வார்களானால் சிறைத்தண்டனையை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.