சண்டை தொடர்வதை விரும்பும் வல்லரசுகள்

cab31k69அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் அமெரிக்க அரசு அதிகாரிகளை சந்தித்து சிறீலங்கா விவகாரம் தொடர்பில் பேச்சுக்களில் ஈடுபட்ட இந்திய வெளிவிவகாரச் செயலர் சிவசங்கர் மேனன் சண்டைகள் முடிந்து புலிகள் பலமிழந்த பின் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கருத்துக் கூறியுள்ளார்.

சிறீலங்காவில் நிரந்தர அமைதி ஏற்பட யுத்தம் வெற்றிகரமாக முடிந்த பின் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என்று மொட்டையாகக் கருத்துக் கூறியிருக்கும் மேனன்.. அது எவ்வகையான அதிகாரப்பகிர்வு எந்தளவு என்ற எதனையும் தெளிவாக வரையறுத்துக் குறிப்பிடவில்லை.

சிறீலங்காவை போரின் விளைவுகளில் இருந்து மீளக்கட்டி எழுப்பும் அதேவேளை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வளிப்பதும் அவசியம் என்று மட்டும் கூறி இருக்கின்றனர் அமெரிக்க – இந்திய தரப்புக்கள்.

சிறீலங்கா விவகாரத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒரே நோக்கோடு செயற்படுவதாகவும்வும் இதில் கருத்து முரண்பாடுகளுக்கு இடமில்லை என்றும் இரு தரப்புச் செய்திக்குறிப்புகளும் குறிப்பிட்டுள்ளன. அமெரிக்கா மக்களின் இயல்வு வாழ்வு விரைந்து திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய கள நிலவரங்கள், மக்களின் அழிவுகள் அதை நிறுத்துவதற்கான எந்த காத்திரமான முடிவுகளையும் இரு தரப்பும் செய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகெங்கும் தமிழ் மக்கள் யுத்த நிறுத்தத்துக்கு வழியுறுத்தி வரும் இவ்வேளையில் இந்திய அதிகாரியின் இப்பேச்சு தமிழ் மக்கள் மீதான போரை இந்தியா ஆதரித்து நடத்திச் செல்வது போன்ற நிலையையே தெளிவுறுத்திக் காட்டி இருக்கிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.