(2ம் இணைப்பு – காணொளி) தமிழர்களைப் பற்றி நான் அலட்டிக் கொள்ளப் போவதில்லை! அசினின் திமிருக்கு தமிழர்கள் பதிலடி கொடுப்பார்களா??
-
இவ் விடயம் 13. 07. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 0:53க்கு பதிவு செய்யப்பட்டது
- காணொளி & ஒலி, தாயக, இலங்கைச் செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி
காணொளி நன்றி: அதிர்வு
கேரளாவில் பிறந்து தமிழ்ச் சினிமாவால் தத்தெடுக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்கும் நடிகை அசின்.
தன்னை தமிழ் திரையுலகினர் ஒன்றும் செய்துவிட முடியாது என்றும், தான் இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவது இல்லை என்றும் அசின் தெரிவித்துள்ளமை உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பலத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் அரசியல்வாதி இல்லை, ஒரு நடிகை என்று தன்னைக் கூறிக்கொண்டு, இலங்கை சென்ற அசின் தற்போது, மகிந்தவின் மனைவியுடன் பிசினாக ஒட்டி, பல இடங்களுக்கும் உல்லாசப் பயணம் சென்று, ஷிராந்தி ராஜபக்ஸ வருங்கால அரசியல் வாதியாக வருவதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு தேடிக் கொடுத்துள்ளார்.
தமிழ் நாட்டையும், தமிழ்த் திரையுலகத்தினரையும், தமிழ் ரசிகர்களையும் தூக்கி எறிந்து துச்சமாக மதித்து யாழ் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய இப்பேட்டியானது பல்வேறு முரண்களுக்கு வழி வகுத்துள்ளது.