சிலியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

சிலி நாட்டின் கோடெல்கோ மாகாணத்தில் நேற்று இரவு நள்ளிரவு 1 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

இதைத்தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித் தனர்.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதவிவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கோடெல்கோ பகுதியில் உள்ள தாமிர சுரங்கங்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட வில்லை. சிலி நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 8.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 500 பேர் உயிரிழந் தனர். பல கோடி சேதம் ஏற்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.