தமிழீழ பெண் அவுஸ்திரேலிய செனட் சபை தேர்தலில் போட்டியிடவுள்ளார்

இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் அவுஸ்திரேலிய செனட் சபை தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
பிராமி ஜெகன் என்ற இலங்கைத் தமிழ் பெண்ணே இவ்வாறு அவுஸ்திரேலிய செனட் சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட, 30 வயதான பிராமி ஜெகன் பல வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி சரணடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தனது கடந்த காலம் கசப்பானது எனவும், தமது சமூகத்திற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியின் சார்பில் பிராமி ஜெகன் போட்டியிடவுள்ளார்.
 
கடந்த யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சோமாலியா, தன்hசானியா, மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தஞ்சமடைந்து இறுதியில் அவுஸ்திரேலியாவில் பிரமி ஜெகனின் குடும்பத்தினர் தங்கியுள்ளனர்.
 
2002ம் ஆண் தமது தந்தையுடன் இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர் சமூக சேவைகளில் அதிக நாட்டம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தம் காரணமாக மக்கள் எதிர்நோக்கி வரும் அவலங்களை நேரில் பார்வையிட்டதனால் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்ற உந்துதல் உருவானதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
 புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கூடுதல் நன்மை அளிக்கும் வகையில் பிராமி ஜெகன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.