வடமாகாண ஆளுநரின் காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் பெற்ற யாழ் அரச அதிபர்!

யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஸ் சிறிலங்காவின் யாழ் மாவட்ட முன்னாள் படைத் தளபதியும், வடக்கு மாகாண ஆளுனருமான மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியின் கால்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாண அரசாங்க அதிபர் தன்னிலும் மிகவும் வயது குறைந்த சந்திரசிறியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற போது, சிறிலங்கா அரசின் உயர்மட்ட அதிகாரிகள் அதனை வரவேற்றதாகவும் இந் நிகழ்வைக் கண்டோர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் கால்களில் வீழ்ந்தே இவர் தனது சேவைக் கால நீடிப்பினை பெற்றுக் கொண்டதாக அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்திருந்தார்.

69 வயதான இவரின் சேவைக் காலம் மறு அறிவித்தல் வரை மீண்டும் நீடிக்கப்பட்டமையானது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
சிறிலங்கா அரசின் ஆளும் உயர் மட்டத்தினரின் கால்களைப் பிடித்தே அவர் தனது சேவைக் கால நீடிப்பைப் பெற்றுக் கொண்டமை பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

இதேவேளை, இவரின் இந் நிகழ்வால் யாழ்ப்பாண செயலக அதிகாரிகளும் மற்றும் அலுவலகர்களும் பெரும் அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவரது இடமாற்றம் அரசியல் காரணங்களால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை தெரிந்ததே.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.