யாழ்மாவட்ட அரச அதிபராக இமல்டா சுகுமார் பதவியேற்பு

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த யாழ் மாவட்ட அரச அதிபர் பதவிப் பிரச்சனை இன்று முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக முன்னாள் முல்லைத் தீவு அரச அதிபர் இமல்டா சுகுமார் யாழ் மாவட்ட அரச அதிபராக பதவியேற்றுள்ளார்.

இந்தப் பதவியேற்பு வைபவத்தின் பின் உரையாற்றிய அவர் அரச அதிபர் கே. கணேஸ் தனது குரு எனவும் தமக்கிடையே மனக்கசப்புகள் முரண்பாடுகள் ஏற்படவில்லை எனவும் தெரிவித்ததோடு ஊடகங்களே பலவாறான செய்திகளை வெளியிட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை இங்கு கருத்துரைத்த கே.கணேஸ் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாகவே தான் பதவியில் நீடித்ததாகவும் பதவிக் கதிரையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற தேவை தனக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.