வேலணை மருத்துவ தாதியின் மரணம்: சிங்கள வைத்தியர் கைது!

வேலணை மருத்துவ தாதியின் மரணம் தொடர்;பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிங்கள வைத்தியர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலியிலுள்ள சுகாதார திணைக்களத்தின் விடுதியில் தங்கியிருந்த போது கைது செய்யப்படட இவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, இப் படுகொலையைக் கண்டித்தும், குற்றவாளியைக் கைது செய்யக் கோரியும்ஈ பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நட்ட ஈட்டை வழங்கும் படி கோரியும் அனைத்து குடும்ப நல மருத்துவ தாதிகளும் இன்று பணிப்புறக்கணிப்பும் போராட்’டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளும் தொழிற்சங்க நடவடிக்கைளை மேற்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் உள்ள  பிராந்திய சுகாதார திணைக்களத்தின் அலுவலகத்தை இழுத்து மூடிய அவர்கள் இன்று அதன் பணிகளை முற்றாக முடக்கியுள்ளதாக அச் செய்திகள் மேலும் குறிப்பிட்டன. இப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மருத்துவ தாதிகள் மற்றும் பணியாளர்கள், பொது சுகாதாரப் பணியாளர்கள் என பலரும் கூடி இச் சம்பவத்திற்கு எதிரான தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுகாதார திணைக்களத்தின் நால்வர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று யாழ்ப்பாணம் சென்று விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தெரிய வருகின்றது.

இதேவேளை, வவுனியா வாடிவீட்டு வளவுக்குள் இருந்து இன்று காலை ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தாண்டிக்குளத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ரகுநாதன் ரகுதீபன் என அடையாளம் கண்டுள்ளதாக சிறிலங்காப் பொலிஸார் தெரிவித்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.