அகதிகளுக்கான மத்திய நிலையத் திட்டம் கிழக்குத் கிழக்குத் திமோரினால் நிராகரிப்பு

இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து அகதிகளாக வரும் மக்களைத் தங்க வைப்பதற்காக திமோரில் மத்திய நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பாக அவுஸ்திரேலியா விடுத்திருந்த அறிவிப்பை கிழக்குத் திமோர் நிராகரித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கிழக்குத் தீமோர் நாடாளுமன்றம் சாதகமான எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என கிழக்கு திமோர் பிரதமர் ஜனானா குஸ்மாவோ தெரிவித்துள்ளார்.

அஸ்திரேலியாவிற்குள் கடல் மார்க்கமாக வரும் அகதிகளை கிழக்குத் திமோரில் அகதிகளுக்கான மத்திய நிலையத்தில் தங்க வைத்து அடையாள பத்திரங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதே அவுஸ்திரேலியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டமாகும்.

எனினும் இது தேவையற்ற நிர்ப்பந்தங்களை திமோருக்கு ஏற்படுத்தும் என கிழக்குத் திமோர் நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.