நாளை கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டம்

சிறிலங்கா அமைச்சரவையின் கூட்டம் நாளை கிளிநொச்சியில் நடைபெற இருக்கிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு மகிந்த றாஜபக்ச தலைமை வகிக்க இருக்கிறார்.

அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து வட மாகாண அபிவிருத்தி குறித்த ஆய்வுக் கூட்டமொன்றும் அங்கு நடத்தப்பட உள்ளது. கொழும்பில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடத்தப்பட்டு வந்த அமைச்சரவைக் கூட்டம் இம்முறை கிளிநொச்சியில் நடத்தப்பட உள்ளது.

மீள்குடியேறிய மக்களின் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையில் அங்கு சுமுக நிலை நிலவுவது போன்ற தோற்றப்பாட்டை சர்வதேச அரங்கிற்குக் காட்டுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.