தலைமன்னார் கடற்கரையில் சேதமடைந்த ஆண் சடலம் மீட்பு

நடுக்குடா கடற்கரைப் பகுதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலத்தை தலைமன்னார் பொலிஸார் மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இடுப்புக்கு கீழ்பட்ட பகுதியே மேற்படி மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேற்படி சடலத்தை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி ஜீவராணி வைத்தியசாலைக்கு சென்று  பார்வையிட்டதோடு, மேலதிக பரிசோதனைக்காக சடலத்தை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.