திருமலையில் துப்பாக்கிச் சூடு – இராணுவ சிப்பாய் பலி

திருகோணமலையில் சிறிலங்காப் படைவீரர் ஒருவர் நடத்திய கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டில் சக படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் மூவர் காயமடைந்தனர்.

சேருநுவரவில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கடமையில் இருந்த இராணுவத்தினரில் ஒருவர் வெறுப்படைந்த நிலையில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில் லெப்டின்ன்ட் தர அதிகாரி உள்ளிட்ட இரு படையினரும் பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவச் சிப்பாய் ஆயுதத்துடன் தப்பிச் சென்று விட்டார். அவரைத் தேடும் பணியில் சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினர் மத்தியில் வெறுப்புநிலை தோன்றியிருப்பதாகவும் இதனால் அவர்கள படைகளில் இருந்து தப்பிச் செல்வது அதிகரித்து வருவதாகவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.