விடுதலைப்புலிகளின் தலைமையகக் கட்டிடத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் அமரர் சு.ப.தமிழ்ச் செல்வனின் இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
கிளிநொச்சியில் இந்த இல்லம் அமைந்துள்ளதாகவும், நாளைய தினம் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகமாகவும் இந்தக் கட்டடம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
 
நாளைய தினம் முற்பகல் பத்து மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், 30 ஆண்டுகளின் பின்னர் அரசாங்கத்தின் உயர் மட்டக்குழுவினர் முதல் தடவையாக கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.