இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு உச்சளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசு

இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு உச்சளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மீது தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதாகவும், இதனால் சென்னையில் காணப்படும் இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் மூடப்பட வேண்டுமென தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
 
எவ்வாறெனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கைக் கடற்படையினர் முற்று முழுதாக நிராகரித்துள்ளனர்.
 
இதேவேளை, யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தாமாகவே சுய விருப்பில் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்தியாவிற்கான இலங்கைப் பிரதி உயர்ஸ்தானிகர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
 
அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பான எவ்வித திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், மக்கள் பெருமளவில் நாடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.