மட்டக்களப்பு மாவட்டத்தில் மினி சூறாவளி! – 30 வீடுகள் முற்றாகச் சேதம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய கோப்பாவெளி பிரதேசத்தில் வீசிய கடுமையான மினி சூறாவளியால் 30 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

நேற்று மாலை வீசிய இக்கடுமையான காற்றினால் வீடுகளையிழந்த மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்று மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டதிதில் ஆறு கரையோர பிரதேசங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள களுவன்கேணி கரையோரப் பிரதேசத்தமில் நிர்மாணிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கோபுரமே இயக்கப்பட்டது.

இந்த எச்சரிக்கை கோபுரத்திலிருந்து பாரிய சத்தத்துடன் ஓலி எழுப்பப்பட்டு சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் சுனாமி ஆழிப்பேரலைத் தாக்கத்தினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். இம் மாவட்டத்தில் சுனாமி ஆழிப்பேரலையால் 2,800 பேர் பலியாகி, 600 பேர் காணாமல் போயுள்ளதுடன், 24,000 வீடுகள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.