உகண்டா குண்டு வெடிப்பில் தமிழ் வைத்தியரும் பலி

உகண்டாவில் இம்மாதம் 11ம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராமராஜ் கிருஸ்ணா என்ற இந்த வைத்தியர் குருநாகல் மாவட்டம் மாவத்தகமவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும் இலங்கையில் வைத்தியராகப் பணியாற்றிய இவர் உகண்டாவில் விற்பனை முகாமையாளராகப் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

50 வயதான இவரில் உடலை இலங்கைக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை இலங்கைத் தூதரகம் மேற்கொண்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.