வெள்ளையர்களை ஓட ஓட விரட்டியவர்கள் சிங்களவர்கள் – மேர்வின் சில்வா

இலங்கையிலிந்து வெள்ளையர்களை ஓட ஓட விரட்டியவர்கள் சிங்களவர்கள் என்றும் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சும் இனம் சிங்கள இனம் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் எனவும் பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருக்கிறார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் அச்சூடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

வரலாறு அறிந்த எவரும் தற்போது நாட்டிற்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் குறித்து அச்சடைய மாட்டார்கள் எனத் தெரிவித்த மேர்வின் சில்வா இலங்கையர்கள் ஆடை உடுத்திய காலத்தில் வெள்ளையர்கள் ஆடையின்றி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிங்கள இனத்தினதும் நாட்டினதும் வரலாற்றை பான்கீமூனுக்கு கற்றுக் கொடுத்தால் அவர் மண்டியிட்டு சிறிலங்காவிற்கு வருவார் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.