சென்னை விமான நிலையிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இந்தியாவின் சென்னை விமான நிலையில் இருந்து கடந்த 11 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் சிலாவத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஷாந்தன் யோகன் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது சந்தேக நபர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கு இந்திய பிரஜை ஒருவரை தாக்கி காயமேற்படுத்திய சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
 
இந்தியாவுக்கு பிரவேசிக்க முடியாதவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள யோகன் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டார். இந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி சென்னை சென்ற போது, இந்திய அதிகாரிகள் அவரை கைதுசெய்து இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளனர். நாடு கடத்தப்பட்ட நிலையில் சந்தேக நபர் ஏன் இந்தியாவுக்கு சென்றார் என்பது குறித்து காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.