ஐ.நா குழுவிற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட்

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா குழுவிற்கு இந்திய அரசு ஆதரவளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா. பாண்டியன் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வுக்காக ரூ.1,900 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அந்தத் தொகை, முழுமையாக தமிழர்களுக்கு பயன்படுகிறதா என்பதை கண்டறிய பத்திரிகையாளர் குழு இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா.குழுவிற்கு இந்திய அரசு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.