வட மகாணசபைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளிவரும்!

இந்த வருட இறுதிக்குள் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவுப்பு அரசாங்கத்தினால் வெளியிடப்படும். எனினும், வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் சரியான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு மாகாண சபையை நிறுவ வேண்டும் என்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் முக்கியத்துவம் அளிக்கும் விடயங்களில் ஒன்றாகும். கிழக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு அங்கு மாகாண சபை இயங்கி வருகின்றது.

அதேபோன்று வடக்கிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டிய தேவையுள்ளது. அதாவது அப்பிரதேச மக்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யவேண்டும். அந்த ஜனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும்.

எனவே இந்த வருட இறுதிக்குள் வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் வெளியிடப்படும் என்பதை உறுதியாக கூறமுடியும். ஆனால் தேர்தல் நடைபெறும் திகதியை உறுதியாகக் கூறமுடியாது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.