சீமான் அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வருக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம்

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் சீமான் அவர்கள் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வருக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள். அந்த கடித்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம்
தமிழீழ புரட்சிகர மாணவர்கள்
பிரித்தானியா
14.07.2010

தலைமைச் செயலகம்
தமிழக முதல்வர்
தமிழ்நாடு

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும், மாணவர்களும், குழந்தைகளும் சேர்ந்து தங்களுக்கு எழுதும் மடல், சொந்த மண்ணையும், சொந்தங்களையும், உடமைகளையும் சிங்களன் பறித்து விட்ட பிறகு அகதிகளாய் பல நாடுகளில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .

என்றாவது ஒரு நாள் தாய் மண்ணில் வாழ்வோம் என்ற நம்பிக்கையிலும் தாய் தமிழகம் அதற்கு வழிவகை செய்யும் என்ற ஏக்கத்தில் தங்களின் முடிவுகளுக்காக காத்து நிற்கிறோம் .கடந்த வருடம் ஈழத்தில் நடந்து முடிந்த எல்லாமும் தாங்கள் அறிந்ததே .இலங்கை அரசு இன்னமும் இன அழிப்பு வேளைகளில் மும்மரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது .

இலங்கையில் மட்டுமல்ல புலம் பெயர்ந்து வாழும் எங்களையும் அழித்து விட பல்வேறு வழிகளை தேடிக்கொண்டிருகிறது .மண்ணில் இருந்து வரும் செய்திகளெல்லாம் கொடுமையின் உச்சமாக வருகிறது. இந்நிலையில் எங்களுக்காக தாங்களும், மற்ற தலைவர்களும், அண்ணன் சீமானும் கொடுக்கிற எதிர்ப்பு குரல்கள்தான் எங்களுக்கு ஓரே ஆறுதல்.

சிங்கள அரசு யாருக்கு பயப்படுகிறதோ இல்லையோ தமிழ் நாட்டின் எதிர்ப்புக்குபயப்படுகிறது .அண்ணன் சீமானின் எதிர்ப்புகுரல்தான் மிச்சம் மீதி இருக்கும் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது .அந்த குரல் ஒலிக்கவில்லை என்றால் அது எமக்கு மிக பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆதலால் அண்ணன் சீமானை எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்யுமாறு தங்களை தாழ்மையுடனும், பணிவன்புடனும் கேட்டுகொள்கிறோம்.

நன்றி
ச.லவதீபன்
செய்தி தொடர்பாளர்

தலைமைச் செயலகம்
தமிழீழ புரட்சிகர மாணவர்கள்
பிரித்தானியா
website:www.rste.org
Email: info@rste.org

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.