வீரவன்சவின் போராட்டம், பான் கீ மூனின் அறிக்கை என்பன தொடர்பில் இன்னர் சிற்றி பிறஸ் கேள்வி

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அதிகாரத்தைக் குறைப்பது தொடர்பான அறிவிப்பை ஜூலை 9 இல் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்தபோது அந்த அறிக்கையின் நோக்கமானது புரிந்துகொள்ளக்கூடியதாக இல்லை.

சில மணித்தியாலங்களின் பின்னர் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச முடிவுக்கு கொண்டுவந்தார் என்று நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்திருப்பதாவது;

ராஜபக்ஷ அரசுடன் வீரவன்சவின் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான களத்தை அமைக்கும் விதத்தில் அறிக்கை தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தால், ஐ.நா.முறைமைக்கு வெளியே யாருடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக அதாவது இறுதி அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாக யாருடன் கலந்தாலோசிக்கப்பட்டது என்பது குறித்து இன்னர்சிற்றி பிரஸ் ஐ.நா.வின் இணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் கேட்டது.

மறைமுகமாக ஹக் பதிலளித்தார். பான் கீ மூனின் அறிவிப்புக்கு முன்னராக வெறுமனே வலியுறுத்தல் விடுப்பதாக அறிக்கை அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால், அந்த அறிக்கை ஏன் வெளியிடப்பட்டது?

பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக பான் கீ மூனின் ஜூலை 9 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் இது தொடர்பான பொறுப்பு இலங்கை அரசாங்கத்தினுடையது என்பதே ஐ.நா.அடையாளம் கண்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது உதாரணமாக ஒன்று கூட இதில் கூறப்பட்டிருக்கவில்லை.

நிபுணர் குழுவின் நோக்கமானது பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கவே என்பது அநேகமான அனுமானமாகும். ராஜபக்ஷவின் “கற்றுக்கொண்ட பாடங்கள் பொறிமுறையானது போதியதாக இருக்கின்றது என்பதே இந்த ஊகமாகும்.

ஆனால், நிபுணர் குழு இலங்கைக்குச் செல்லுவதற்கான விசாவுக்கான அழைப்பை விடுப்பது பற்றியோ அல்லது அது தொடர்பாகவோ பான் கீ மூன் கூறியிருக்கவில்லை.

வதிவிட ஒருங்கிணைப்பாளருடனான கலந்தாலோசனையுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக பான் கீ மூனின் இணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ளார். இது உதவியானதாக அமையும் என்று அவர் நினைத்துள்ளார்.

பூனே யாருடன் கலந்தாலோசனை மேற்கொண்டார் என்பது பற்றி ஹக் கூறியிருக்கவில்லை.

நியூயோர்க்கில் இருக்கும்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பூனே பதிலளிக்கக் கூடியதாக இருக்குமா என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது.

“இன்று பூனே வருகிறார் என்று ஹக் பதிலளித்தார். செய்தியாளர்களுடனான சந்திப்பு இடம்பெறுமா என்பது குறித்து தன்னால் நிச்சயப்படுத்திக்கொள்ள முடியாதிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, திங்கட்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹண இனப்படுகொலை ஞாபகார்த்த நிகழ்வொன்றில் தோன்றினார்.

1995 இல் சிறிபெரனிக்காவில் ஐ.நா.வால் இடமளிக்கப்பட்டிருந்த இனப்படுகொலையின் ஞாபகார்த்த நிகழ்வு அதுவாகும். பான் கீ மூன் அங்கு பதிலளிக்கும் கடப்பாடு குறித்து பேசினார்.

கேள்விகளுக்கு பதிலளிக்க பான் கீ மூன் மறுத்திருந்த நிலையில் ஏனைய தூதுவர்களுடன் அவர் கதைத்தார்.ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகம் ஷா சுகாங்குடன் கோஹண மகிழ்ச்சியான உணர்வுடன் கதைத்தார்.

பின்னர் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பொதுத் தகவலுக்கான அதிகாரி கியோட்டஜா அகாசாவுடன் அதிகளவு சூடாக பேச்சு இடம்பெற்றது. ஏனைய சகல தூதுவர்களும் சென்ற பின்னரும் சம்பாஷணை தொடர்ந்தது. எதனைப்பற்றி கோஹண பேசியிருக்கக் கூடும்? என்று இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.