நிபுணர்கள் குழுவினை ஓர் அங்கீகரிக்கப்பட்ட அலகாக ஏற்றுக்கொள்ள முடியாது – பாலித கொஹணே

பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவினை ஓர் அங்கீகரிக்கப்பட்ட அலகாக ஏற்றுக்கொள்ள முடியாதென ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

குறித்த நிபுணர்கள் குழுவினை ஐக்கிய நாடுகளின் எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றும் அலகும் அங்கீகரிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்த நிபுணர்கள் குழுவினை ஓர் அதிகாரபூர்வமான அலகாக கருத முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் கடந்த வருடம் முன்வைக்கப்பட்ட இந்த மாதிரியான யோசனைத் திட்டமொன்றை இலங்கை நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேவேளை, நிபுணர்கள் குழுவின் பணிகள் விசாரணை நடத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், தமக்கு ஆலோசனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.