2014ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக்கிண்ண சின்னம் அறிமுகம்

2014ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பிரேஸிலில் நடைபெறவுள்ளன. இந்நிலையில் அப்போட்டிக்கான உத்தியோக பூர்வ சின்னத்தினை சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களில் சம்மேளனத்தின் தலைவர் ஜோஸப் எஸ்.பிளட்டர் வெளியிட்டு வைத்திருக்கிறார்.

தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க் நகரில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரேஸிலின் ஜனாதிபதி லுயிஸ் இக்னாஸியோ லூலா த சில்வா மற்றும் 2014ஆம் ஆண்டு கால்பந்தாட்ட ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் றிசார்டோ டெக்டீரா ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.