கடல் பெருக்கால் இலங்கை அழிந்து விடும் பேரபாயம்! சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இலங்கை கடல் பெருக்கால் அழிந்து போகின்றமைக்கான பேராபத்து உண்டு என்று சர்வதேச விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவின் Colorado பல்கலைக்கழகம், அந்நாட்டு தேசிய சுற்றுச் சூழல் ஆய்வு மையம் ஆகியன இந்து சமுத்திரம் தொடர்பாக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தின.

இந்து சமுத்திரத்தின் நீர் மட்டம் சீரற்ற முறையில் அடிக்கடி உயர்ந்து செல்கின்றமையை அவை இந்த ஆய்வில் மிகவும் கவனத்தில் கொண்டிருந்தன. இவ்வாறு இந்து சமுத்திரத்தின் நீர்மட்டம் சீரற்ற முறையில் அடிக்கடி உயர்ந்து செல்கின்றமையால் ஒரு கட்டத்தில் இச்சமுத்திரம் பெருக்கெடுக்கக் கூடும் என்றும் இதனால் இலங்கை, பங்காளதேஷ், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் நீருக்குள் மூழ்கி விடுகின்ற பேராபத்து உள்ளது என்றும் அந்த ஆய்வை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக இந்நாடுகளின் கடலோரப் பகுதிகள் நீருக்குள் மூழ்கி விடலாம் என்றும் இதனால் பாரிய மனிதப் பேரழிவுகளும், இடப்பெயர்வுகளும் இடம்பெறலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளார்கள். சர்வதேச காலநிலை மாற்றமே இந்த அபாய நிலைக்கு காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.