யாழ்ப்பாணம் அரச அதிபரைச் சந்திக்க பல்கலைக்கழக மாணவர்கள் முடிவு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகப் பதவியேற்றுள்ள திருமதி இமெல்டா சுகுமாரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்காகவே இந்தச் சந்திப்பு மேற்கொள்ளப்பட இருப்பதாக யாழ்ப்பாணம் செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிடப் பிரச்சினை, பாதுகாப்புக் கெடுபிடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்தப் பேச்சுக்களில் ஆராயப்படும் எனவும் அரச அதிபரிடம் இந்தச் சந்திப்புக்கான அனுமதி கோரி விரைவில் விண்ணப்பிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.