நாட்டைக் கட்டியெழுப்ப முன்வாருங்கள்!கிளிநொச்சியில் மஹிந்தர் வடபகுதி மக்களுக்கு அழைப்பு

வட மாகாண மக்கள் அரசியல் பேதங்களைக் கடந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன் வர வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரி உள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும்,அவரது பரிவாரங்களும் இன்று காலை கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டத்தை நடதிய பின்னர் போருக்கு பிந்திய அம்மாவட்டத்தின் அபிவிருத்தி நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டார்கள்.

ஜனாதிபதி இரணைமடு மக்கள் மத்தியில் மாலை நேரம் உரை ஒன்றும் ஆற்றினார். அப்போதே அவர் இக்கோரிக்கையை விடுத்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு,

”விடுவிக்கப்பட்டுள்ள இந்த பூமியை மீளக் கட்டியெழுப்புவதற்காக நீங்கள் அனைவரும் சகல அரசியல் பேதங்களையும் மறந்து நாட்டுக்காக உழைக்க முன் வரவேண்டும் . குறிப்பாக அரச ஊழியர்கள் அரசியல் பேதங்களை மறந்து நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும்.

வடக்கிலும் கிழக்கிலும் பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப அரச ஊழியர்களின் சேவை அத்தியாவசியமானதாகும். ”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.