உடுப்பிட்டியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது

வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்த செல்வி சிவகுருநாதன் ஜெயகௌரி வயது 40 என்ற பெண் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டு அங்கிருந்த அவரது நகைகள்,பணங்கள் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இவரது  உடலம் பலத்த அடிகாயங்களுடன் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தற்போது ஈழத்தில் இல்லாத காரணத்தால் பல கொலைகள்,கொள்ளைகள்,கற்பளிப்புக்கள் என்பன வழமையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.