பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம் விமானத் தளமாக மாற்றம்

பண்டிவிரிச்சான் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் தற்போது விமான ஓடு பாதையாகவும் விமானத் தளமாகவும் இராணுவத்தினரால் மாற்றப்பட்டுள்ளது.

மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பண்டிவிரிச்சான் பகுதியிலேயே மேற்படி துயிலும் இல்லம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது துயிலும் இல்லம் முழுமையாக உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

சுற்று மதில்களும் உடைக்கப்பட்டு விமானத் தளமாக மாற்றப்பட்டுள்ளது. வன்னிப் பகுதி முழுமையாகக் கைப்பற்றப்பட்ட நிலையில் மடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு அமைச்சர்களும் அரசாங்க உயரதிகாரிகளும் வன்னிப் பகுதிக்கு அடிக்கடி விமானத்தில் வருவது வழக்கம். இதனையடுத்தே மேற்படி மாவீரர் துயிலும் இல்லம் விமானத் தளமாக மாற்றப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.