கூகுள் துணையுடன் நம் மொபைலுக்கு அப்ளிகேசன் நாமே உருவாக்கலாம்
-
இவ் விடயம் 15. 07. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 4:47க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள், காணொளி & ஒலி
மொபைல் போனுக்காக சிறப்பான அப்ளிகேசன் தேடி போரடித்து விட்டதா நம் மொபைலுக்கு தேவையான அம்சங்களை நாமே கூகுளின் துணை கொண்டு உருவாக்கலாம் எப்படி என்பதைப்பற்றித் தான் இந்தபதிவு.
ஆண்டிராய்டு அப்ளிகேசன் மூலம் மொபைலுக்கு தேவையான அப்ளிகேசனை இனி நாம் உருவாக்கலாம் இதற்க்காக கூகுள் அப்ளிகேசன் இன்வெண்டர் என்பதை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் விருப்பதிற்கு ஏற்ப யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மொபைல் அப்ளிகேசன் உருவாக்கலாம். மொபைல் அப்ளிகேசன் எப்படி உருவாக்க வேண்டும் என்பதை படிப்படியாக அவர்களே சொல்லித்தருகின்றனர்.
புதுமையாக மொபைல் அப்ளிகேசன் உருவாக்க விருப்பம் உள்ள அனைவரும் இனி கூகுள் அப்ளிகேசன் இன்வெண்டர் மூலம் எளிதாக மொபைல் அப்ளிகேசன் உருவாக்கலாம். எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றிய சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.