சமாதான முனைப்புக்கள் தோல்வியடைந்ததன் பின்னரே விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முன்னெடுக்கப்பட்டது – மஹிந்த

சமாதான முனைப்புக்கள் தோல்வியடைந்ததன் பின்னரே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
தேசிய இன்பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வினை முன் வைப்பதற்கு அரசாங்கம் எடுத்த சகல முனைப்புக்களையும் புலிகள் நிராகரித்த காரணமாகவே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது என்பதனை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
புலிகள் பேச்சுவார்த்தைகளை ஏற்றுக் கொண்டிருந்தால் கிளிநொச்சியில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், பயங்கரவாதிகள் சமாதான முயற்சிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் காணமாக வடக்கு மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வடபகுதி ரயில் பாதையை , கிளிநொச்சி வைத்தியசாலையை யார் தாக்கி அழித்தார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
வடக்கின் முக்கியமான நிலைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளே தாக்குதல் நடத்தியதாக அவா குறிப்பிட்டுள்ளார்.
 
கர்ப்பிணித் தாய்மார், தமிழ் புத்திஜீவிகள், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் படுகொலை செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் கிளிநொச்சி வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டதாகவும், தற்போது உலக வங்கியின் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அரச சொத்துக்களுக்கு பாரியளவு சேதம் ஏற்பட்டிருக்கா விட்டால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு இந்தப் பணத்தை பயன்படுத்தியிருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மூளை சலவை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கப் படையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் N;பாராட்டம் நடத்தியவர்களுக்கு மறுவாழ்வு அளித்து சமூகத்தில் இணைப்பதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
 
சில அதிகாரிகளும் தொண்டு நிறுவனங்களும் தமது பணிகளை உரிய முறையில் மேற்கொள்ளத் தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விடுகளை காண்பித்து வெளிநாட்டு நிதி உதவிகளை பெற்றுக் கொள்ள சிலர் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக அரசாங்கம் பாரியளவு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.