40 ஆயிரம் அகதிகள் மாத்திரமே முகாம்களில்?? – அரசு அறிவிப்பு

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த வட மாகாண மக்களில் 40 ஆயிரம் பேர் வரையானோரே வவுனியா நலன்புரி முகாம்களில் தற்போது அகதிகளாக உள்ளார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இச்செய்தி வெளியாகி உள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தால் சுமார் 03 இலட்சம் பேர் வரை இடம்பெயர்ந்திருந்தனர்.

வவுனியாவில் மிகப் பெரிய நலன்புரி முகாமாக மனிக் பாம் இருந்து வந்தது என்றும் அது தற்போது நான்கு வலயங்களாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் 3000 பேர் வரையான அகதிகள் கிளிநொச்சிப் பகுதியில் மீள்குடியேற்றப்படுவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.