வைகோ,நெடுமாறன்,சீமானை விடுதலை செய்ய கோரி தொடர பட்ட வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கபட்டு உள்ளது

“நாம் தமிழர்” கட்சியின் சார்பில் கடந்த 15‐ந்தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் சிங்கள ராணுவத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்திய இறை யாண்மைக்கு எதிராக பேசியதாகவும், இரு சமூகத்தினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் சீமானை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் தனக்கு  ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு இன்று நீதிபதி தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பில் வக்கீல் என்.சந்திரசேகரன் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறும் போது, நாம் தமிழர் இயக்கத்தின் ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசும் போது இந்திய தேசிய ராணுவம் இலங்கைக்கு அமைதி படையாக சென்று தமிழ் பெண்களை கொடுமை செய்தது என்றும் நடக்காத ஒன்றை நடந்ததாக சீமான் கூறியுள்ளார் என போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர்.
 
மேலும் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதை சாக்காக வைத்து சிங்களர்கள் மற்றும் தமிழர்கள் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார் என்றும் இதே நிலை நீடித்தால் இந்தியாவிற்கு படிக்க வரும் ஒரு சிங்கள மாணவன் கூட உயிரோடு நாடு திரும்பமாட்டான் என்றும் சீமான் பேசியதாக போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர்.
 
ஒரு பேச்சின் மூலம் உடனடியாக வன்முறை தூண்டப்பட்டால் மட்டுமே அது வன்முறையை தூண்டிய பேச்சாக அமையும்.
 
ஆனால் சீமானின் ஆர்ப்பாட்டமும் அவரது பேச்சும் அமைதியாகவே நடந்து முடிந்துள்ளது. சீமானின் கட்சியில் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் சேருவதை தாங்கி கொள்ள முடியாமல் அரசியல் ரீதியாக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது எனவே முன் ஜாமீன் தர வேண்டும் என்றார்.
 
பின்னர் சென்னை பெருநகர குற்றவியல் அரசு தலைமை வக்கீல் ஷாஜகான் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவில் சீமானின் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் நாளை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்  என்று உத்தர விட்டு வழக்கை ஒத்திவைத்தார்
 
சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடக்கோரி போராட்டம் நடத்திய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.