தலைமைத்துவத்திற்கெதிராக எந்தச் சதியிலும் ஈடுபடவில்லை – சஜித் பிரேமதாசா

தாம் எக்காலத்திலும் கட்சித் தலைமைக்கெதிராக சதி முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் மகனுமான சஜித் பிரேமதாசா தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய தினம் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சஜித் பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை தற்போதும் ஏற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைப் பதவியைத் தட்டிப்பறிக்கும் எண்ணம் தன்னிடம் கிடையாதெனத் தெரிவித்த  சஜித் பிரேமதாசா கட்சிக்குள் ஜனநாயகம் கட்டி எழுப்பப்பட வேண்டும் எனவே தான் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

கட்சிக்கோ, தலைமைத்துவத்திற்கோ நான் ஒருபோதும் துரோகமிழைக்க முற்படவில்லை. எப்போதும் நான் கூட்டுப் பொறுப்புடனேயே செயற்பட்டு வருகின்றேன். எனது கருத்துகள் சில ஊடகங்களில் திரிபுபடுத்தியும் தவறான முறையிலும் வெளியிடப்பட்டதன் காரணமாக மக்கள் மத்தியில் தப்பெண்ணங்கள் உருவாகக் காரணமானது எனவும் சஜித் பிரேமதாசா குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.