அரசியல் சாசனத் திருத்தத்தில் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது – மனோ கணேசன்

அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் போது அதில் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேட்டுள்ளார்.

இதற்காக அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சிறுபான்மை கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும் அவர்களது பங்களிப்புடனான திருத்தமே நாட்டில் நிரந்த சமாதானத்திற்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களை விடவும் தெற்கில் வாழும் சிறுபான்மை மக்களே அரசியல் சாசனத் திருத்தங்களினால் அதிக பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி வரும் எனத் தெரிவித்த மனோ கணேசன் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமிடத்து சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் பெருமளவில் குறையும் எனவும் அச்சம் வெளியிட்டார்.

பல்லின நாட்டிற்கு மிகவும் பொருத்தமான தேர்தல் முறையொன்றை அமுல்படுத்துவது குறித்து ஆராய வேண்டும் எனவும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.