அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் எச்சந்தர்ப்பத்திலும் அகற்றப்பட மாட்டா: கெஹலிய ரம்புக்வெல

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதி உச்ச பாதுகாப்பு வலயங்கள் அவசியமாகும். எச்சந்தாப்பத்திலும் அவற்றை அகற்றவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றபோது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது:-

மக்கள் வாழும் இடங்களில் அதி உச்ச பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுவது ஆதாரமற்றது. அரசுக்குச் சொந்தமான காணிகளிலேயே பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சட்டரீதியாக மக்கள் உரிமை கோரக்கூடிய நிலங்களில் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்படவில்லை.

இடம்பெயர்ந்த மக்களை இலங்கையைப் போன்று விரைவாக மீளக்குடியமர்த்திய நாடு உலகில் எதுமே இல்லை. அப்படியொரு நாடு இருந்தால் அது பற்றி எனக்கு அறிவியுங்கள் என்றும் அமைச்சர் கெஹலிய கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.