சிறிலங்கா காவல்துறையை ஐ.நா.அமைதிப்படையாக பணிக்கு அமர்த்துவதற்கு மறுப்பு! பயண ஆவணங்கள் நிராகரிப்பு!!

அமைச்சர் விமல் வீரவன்ஸ ஐக்கிய நாடுகள் கொழும்பு அலுவலகத்திற்கு அருகில் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தினை அடுத்து ஹெய்டியில் ஐக்கிய நாடுகள் சமாதானப் படையில் பணியாற்றுவதற்காக அங்கு செல்விருந்த 52 இலங்கை காவல்துறையிரை ஐக்கிய நாடுகள் அமைப்பு நிராகரித்துள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

ஹெய்டி செல்வதற்கான ஆவணங்களை இலங்கை காவல்துறை அதிகாரிகள் கடந்த 9 ஆம் திகதி கையளிக்க வேண்டியிருந்தது. இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தமது ஆவணங்கள், வீசா அனுமதி போன்றவற்றை ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைக்கு பொறுப்பான அதிகாரியிடம் கையளித்துள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள குறித்த அதிகாரி சமாதானத்தை பாதுகாக்கும் – ஏனைய அமைப்புகளுக்கு கௌரவமளிக்கும் நபர்கள் வாழும் – நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு பிரிவினரை மாத்திரமே தாம் அமைதிப்படையில் இணைப்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் உள்ள வெளிநாட்டு பிரஜைகளை வீட்டுக்காவலில் வைத்து, அவர்களின் நிறுவனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையின் பாதுகாப்பு பிரிவினரை ஹெய்டிக்கு அனுப்புவது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.