கடல் அச்சுறுத்தல் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்

கடல் போர் மற்றும் கடல் தாக்குதல் அச்சுறுத்தல் பட்டியலிலிருந்து ஜுலை 5ஆம் திகதி முதல் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக கூட்டு சரக்குப் போக்குவரத்து குழுவின் கண்கானிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னர் தரையில் இலங்கை முழுவதற்கும் இருந்த அச்சுறுத்தல் தர நிலைப் புள்ளியான 2.6  (கூடிய நிலை)தற்போது ஏ-9 வீதியின் யாழ்பாணத்திற்கும் வவுனியாவிற்கும் இடைப்பட்ட பகுதிக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

இது தொடர்பிலான உயர் மட்ட பேச்சுவார்த்தையொன்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ், துறைமுக அமைச்சின் தூதுக்குழு லொயிட்ஸ் மார்க்கட் நிறுவனம் மற்றும் அதன் ஆலோசகர்களுக்கும் இடையில் கடந்த வருடம் இடம்பெற்றது.

அத்துடன் மேல் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரலயமும் இந்நிடவடிக்கையில் தீவிரம் காட்டியது.

இது தொடர்பான அபாயம் நீக்கப்பட்டதன் மூலம் இலங்கைக்கான கப்பல் வியாபாரத்தின் நம்பக தன்மை அதிகரித்துள்ளதுடன் கப்பல் காப்புறுதி கட்டணம் குறைவடையும் அத்துடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலையிலும் வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.