மஹிந்தரைப் படுகொலை செய்யச் சதியாம்! சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்று அவரின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோரைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்தனர் என்கிற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படுகிறார்கள்.

கேணல் டபிள்யூ.ஏ.ஆர் சந்திரஸ்ரீ, இராமசாமி பிரபாகரன் ஆகியோரே இவ்வாறு விசாரிக்கப்படுபவர்கள் ஆவர்.

இவர்கள் இருவரும் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் ஆஜராக்கப்பட்டனர்.

இவர்களை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று பொலிஸ் தரப்பில் கோரப்பட்டது. கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி அதற்கான அனுமதியை வழங்கினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.