வன்னியில் தமிழ் பெண்கள் மீது படையினர் சேஷ்டை! பரபரப்புத் தகவல்

வன்னியில் மீள்குடியேற்றப்படுகின்ற பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றார்கள் என்று பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இக்கற்பழிப்புகள் சம்பந்தமாக வன்னியில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற பாதிரியார் ஒருவருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அத்துடன் அண்மையில் இலங்கையின் வன்னிப் பகுதிக்கு தமிழ் நாடு ஊடகவியலாளர் ஒருவர் விஜயம் செய்திருந்தார்.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சோதனை நடவடிக்கை என்கின்ற பெயரில் தமிழ்ப் பெண்களின் அந்தரங்கங்களை வேண்டுமென்றே இரசிக்கின்றார்கள் என்றும் தமிழ் பெண்களின் உடலில் சேஷ்டை செய்கின்றார்கள் என்றும் பாதிரியார், பத்திரிகையாளர் ஆகியோர் வழங்கிய தகவல்களில் இருந்து வெளியாகி உள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.