மன்னாரில் எண்ணெய் அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஆரம்பம்!

மன்னாரில் எண்ணெய் அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் 2011ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மன்னாரின் வடமேற்கு கடல் பிரதேசத்தில் உள்ள 1,450 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் இந்த பெற்றோலிய அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இவ்வமைச்ச குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து சிறிலங்காவின் பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,

மன்னாரில் உள்ள பெற்றோலிய அகழ்வு மற்றும் அது சார்ந்த உற்பத்தி தொடர்பாக சிறிலங்கா அரசும், இந்தியாவைச் சேர்ந்த Cairn நிறுவனமும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந் நிறுவனம் இந்த அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

மன்னாரில் மொத்தம் எட்டு இடங்களில் எரிபொருள் வளம் காணப்படுகிறது. இவற்றுள் இரு இடங்கள் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், ரஸ்யாவின் மிகப் பெரிய எரிபொருள் உற்பத்தி நிறுவனமான Gazprom என்ற நிறுவனமும் இந்த எரிபொருள் அகழ்வில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்க எரிபொருள் நிறுவனங்களும் மன்னாரில் எரிபொருள் வளத்தை அகழ்ந்தெடுப்பததற்கான தமது விருப்பங்களை தெரிவித்துள்ளன என்றும் சிறிலங்காவின் பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் உக்ரேயினுக்கு விஜயம் செய்திருந்த போதும் இலங்கையில் எண்ணெய் அகழ்ந்தெடுப்பததற்கான தனது விருப்பத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.