கருணாநிதியின் உண்ணாவிரதத்தை விட வீரவன்சாவின் உண்ணாநோன்பு மகத்தானது: இந்திய ஊடகம்

தமிழக முதல்வர் கருணாநிதி கடந்தவருடம் மேற்கொண்ட உண்ணாவிரதம் என்ற நாடகத்துடன் ஒப்பிடும்போது வீரவன்சா அவரின் சொந்த மக்களின் இதயங்களை தொட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் சிறீலங்கா தமிழ் மக்களுக்காக சாகும்வரை உண்ணாநோன்பு இருக்கப்போவதாக தெரிவித்த கருணாநிதி ஆறு மணிநேரம் இருந்து சாதனை செய்திருந்தார் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமைச்சர் விமல் வீரவன்சா இந்தியாவின் தீவிர ரசிகனா என்பது வெளிப்படையாக ஒருவருக்கும் தெரியாது. ஆனால் அவர் இரகசியமாக ஹிந்தி படங்களை பார்த்தால், 2006 ஆம் ஆண்டு வெளிவந்த குஃபி டொன், லாச் ராகோ முனாபாய் ஆகியவற்றை வாங்கி பார்ப்பது நல்லது.
ஏனெனில் எதிர்வரும் நாட்களில் இரு நாட்கள் சாகும்வரை உண்ணாநோன்பு இருப்பதற்கு முன்னர் அதனை பார்த்தால் அதில் இருந்த பலவற்றை அவர் அறிந்து கொள்ளமுடியும்.

வீரவன்சா மேற்கொண்ட உண்ணாநோம்பு அவருக்கு நல்ல செல்வாக்கை ஏற்படுத்தி உள்ளது. அவர் கடந்த 21 வருடங்களாக இடதுசாரி கட்சிகளின் தேசிய அரசியலில் பெற்ற செல்வாக்கை விட இது அதிக செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அது சிறீலங்காவுக்கு மிகப்பெரும் இராஜதந்திர தோல்வியை ஏற்படுத்தியுள்ளது. வீரவான்சா உண்ணாநோன்பை மேற்கொண்ட போதும், ஐ.நாவின் ஆலோசனைக்குழு விரைவில் கூடவுள்ளது. அவர்கள் சிறீலங்காவில் நடைபெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்னார்கள்.

எனினும் ஐ.நாவின் கொழும்பு வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே என்பவரை நியூயோர்க்கிற்கு அனுப்புவதும், ஐ.நா அலுவலகத்தை மூடுவதும் தான் விமலின் நோக்கம் என்றால் அதில் அவர் வெற்றியடைந்துள்ளதாகவே கொள்ளப்பட வேண்டும்.

ஆனால் வீரவன்சா மட்டும் இதனை மேற்கொள்ளவில்லை, அதற்கு அரசு வழங்கிய ஆதரவும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளது. மிக அதிகாரம் கொண்ட அமைச்சின் செயலாளர் ஆர்பாட்டக்காரர்களை அடக்கிய காவல்துறை உயர் அதிகாரியை பதவியில் இருந்து நீக்கப்போவதாக மிரட்டியதை யூ ரியூப் எனப்படும் காணொளிகளை பகிர்ந்து கொள்ளும் இணையத்தளம் வெளியிட்டிருந்தது.

விமலின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தது. ஆனால் அவர்களின் இராஜதந்திரம் தோல்வி கண்டுள்ளது. கீழிறங்கி வரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டபோது ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்கள் மீது சிறீலங்கா காவல்துறையினரும், அரசும் கண்ணீர்ப்புகை குண்டு தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன. உண்ணாநோன்பிருந்த பௌத்த துறவிகளையும் காவல்துறையினர் பலவந்தமாக தூக்கிச் சென்றனர்.

எனினும் தமிழக முதல்வர் கருணாநிதி கடந்தவருடம் மேற்கொண்ட உண்ணாவிரதம் என்ற நாடகத்துடன் ஒப்பிடும்போது வீரவன்சா அவரின் சொந்த மக்களின் இதயங்களை தொட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் சிறீலங்கா தமிழ் மக்களுக்காக சாகும்வரை உண்ணாநோன்பு இருக்கப்போவதாக தெரிவித்த கருணாநிதி ஆறு மணிநேரம் இருந்து சாதனை செய்திருந்தார் என அதில் நகைச்சுவையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.