கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல அழிப்புக்கு சிங்கள தொளிலாளர்களே ஈடுபடுகின்றனர்

யாழ் மாவட்டத்தில் மிகுதியாக எஞ்சியிருந்த கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சிங்கள இராணுவத்தினரால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு வருகின்றது.

இவ் மாவீரர் துயிலுமில்ல அழிப்புக்காகத் தென்னிலங்கையில் இருந்து வருகைதந்து யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள சிங்கள வேலையாளர்களை இலங்கை இராணுவத்தினர் தினமும் இரவுநேரத்தில் வான்களில் ஏற்றிவந்து மாவீரர் கல்லறைகளை உடைத்து தரைமட்டமாக்கி வருகின்றனர்.

மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் தற்போது வைரவர் ஆலயம் மாத்திரமே எஞ்சியுள்ளது. ஏனையவை முற்றுமுழுதாக உடைக்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு கொட்டப்படுகின்றன.

இந்நிலையில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அண்மித்துள்ள பகுதியில் வன்னியில் இருந்து மீள்குடியேற்றியுள்ள குடும்பங்களை குடியிருக்க வேண்டாம் எனக் கோரியும் அப்பகுதியைவிட்டு 10 நாட்களுக்குள் வெளியேறும்படியும் இது அரசாங்கத்தினது காணி எனவும் கூறி மக்களை இராணுவம் வெளியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை மாவீரர் துயிலும் இல்லப் பகுதிக்குள் இராணுவக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.