சிங்களவர்களை வேலைக்கு அமர்த்த அமெரிக்க நிறுவனம் தடை

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை கண்டிக்கும் வகையிலும், சொந்த நிறுவனத்தில் பணியாற்றும் சக நாட்டு தமிழர்களிடம் இன துவேஷம் பாராட்டிய சிங்களவர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ள “டின்கார்ப்” (DynCorp) என்ற அமெரிக்க நிறுவனம்,இனிமேல் சிங்களவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்றும் தடை விதித்துள்ளது.

“டின்கார்ப்” நிறுவனமானது அமெரிக்க அரசின் தேசியப் பாதுகாப்பு, வெளிநாட்டு சேவை, சர்வதேச வளர்ச்சித் திட்டங்களுக்கான சேவைகளை அளித்து வரும் ஒரு நிறுவனம் ஆகும்.

கடந்த ஆண்டுவரை 95 விழுக்காடு இலங்கையர்கள் தொழில் புரிந்த இந்த நிறுவனத்தில், இந்த வருடம் 85 சவிழுக்காடுக்கும் குறைவானவர்களே உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் இருந்து தொழிலாளர்களை புதிதாக வேலைக்கு அமர்த்துவதை அந்த நிறுவனம் தற்போது நிறுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அந்த நிறுவனத்தில் பெரும்பான்மையாக தொழில் புரிந்த சிங்களவர்கள், அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த தமிழர்களிடம் இன விரோதம் காட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்தே சிங்களவர்களைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது இந்நிறுவனம்.

மொத்தமாக 550 பேருள்ள இந்நிறுவனத்தின் கத்தார் பிரிவில் 525 பேரும் இலங்கையர்கள். இதில், 47 பேர் இலங்கைத் தமிழர்கள் ஆவர்.

இங்குதான் அதிகமாக இன விரோத நடவடிக்கையில் சிங்களவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இத்தகைய பின்னணியில்தான், இலங்கையில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க வேண்டாம் என “டின்கார்ப்”நிறுவனத்திற்கு அமெரிக்க அரசுத் தரப்பிலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக 1200 சிங்களவர்களுக்கு மேல் இருந்த இந்த நிறுவனத்தில் தற்போது அவர்களின் எண்ணிக்கை 800 ஆக குறைந்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.